Friday, April 9, 2021

வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் சில..


        மனிதனோட மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது வெங்காயம்.ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால் பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக உட்கொண்டார்கள். ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைத்து உடம்பில் பூசி கொள்வார்கள்.இதற்கு உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணம். வெயிலில் அலைந்து, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ளேயே வந்ததும் சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துவிடும்.
                      ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லையா? அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுங்கள். சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் கட்டிகளுக்கு வெங்காயம் மூலம் நிவாரணம் பெறலாம்.
வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் கொப்புளம் உடைந்து சீழும், கிருமிகளும் வெளியேறும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு தணியும்.

 

No comments:

Post a Comment